4362.

          அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
          அளித்திட வல்லீரே வாரீர்
          களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்

உரை:

     அண்டர்க்கு அரும்பதம் தொண்டர்க்கு அளித்திட வல்லீர், தேவர்கட்குப் பெறற்கரிதாகும் சிவபதத்தைத் தொண்டு புரியும் மெய்யன்பர்க்குத் தர வல்ல சிவபெருமானே. களித்து - திருவுளம் மகிழ்ந்து.

     (10)