4365.

          ஆகம வேதம் அனேக முகங்கொண்டு
          அருச்சிக்கும் பாதரே வாரீர்
          ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்

உரை:

     அநேக முகம் கொண்டு அருச்சித்தல், ஆகமங்கள் சரியை முதலிய நால்வகையாலும் வேதங்கள் மந்திர பிராமணங்களாலும் முறைப்படி வழிபடுதல்.

     (13)