4367.

          ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
          ஆரிய ரேஇங்கு வாரீர்
          ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்

உரை:

     ஆல நிழல் - கயிலையில் உள்ள கல்லால மரத்தின் நீழல். அறம் சொன்னது - சவுனகாதி முனிவர் நால்வர்க்கு, அறநெறி பற்றி வைதிக ஞான நுண்பொருளை உரைத்தருளியது வரலாறு. “அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான்” (புள்ளிருக்கு) என ஞானசம்பந்தர் கூறுவர்.

     (15)