4370.

          ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
          கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
          கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்

உரை:

     ஆதார மீதானம், மூலாதாரம் முதலிய ஆதாரம் ஆறினுக்கும் அப்பாலதாகிய துவாத சாந்தம். மீதானம் - மேனிலை. கரும்பினில் இனிக்கின்றீர், கரும்பு போல் இனிமைச் சுவை நல்குகின்றீர்; கரும்பின் இனிமை போல் உயிரிற் கலந்து இனிமை தருகின்றீர் என்றலும் உண்டு.

     (18)