4371.

          ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
          ஜோதிய ரேஇங்கு வாரீர்
          வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியீர் தோற்றமும் கேடும் இல்லாத அருமையும் பெருமையும் உடைய திருவருள் ஒளியையுடையவரே, “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி” என்பர் மாணிக்கவாசகர். வேதியர் - வேதங்களை ஓதியருளுபவர்.

     (19)