4372.

          ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
          பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
          கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     அம்பலம் - தில்லைச் சிற்றம்பலம், கூட வல்லீர் - தான் அருவமாயினும் அருளுருக் கொண்டு கூடி ஞானவின்பம் நல்குவது பற்றி, “கூட வல்லீர்” என்று கூறுகின்றார்.

     (20)