4375.

          இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
          இறையவ ரேஇங்கு வாரீர்
          இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர். வாரீர்

உரை:

     தருணம் - காலம். இடர் - முக்குண வயத்தால் குற்றம் புரிந்து கெடுதல். குற்றமுணர்ந்து நீங்கற்கேற்ப அறிவருளுதல் ஈண்டு ஆட்கொள்ளுதல் எனப்படுகிறது.

     (23)