4376.

          இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
          இதுதரு ணம்இங்கு வாரீர்
          இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்

உரை:

     இச்சை - விருப்பம். யான் விரும்பியவண்ணம் எனக்கு நீ அருள்புரிதற்கு இது தக்க சமயம் என்பது கருத்து.

     (24)