4377.

          இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
          இருக்கின்ற நாதரே வாரீர்
          இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்

உரை:

     துன்பம் சிறிதிருப்பினும் பெற்ற இன்பம் சிதைவது பற்றி, “என் துன்பம் கெடுத்து” எனவும், இன்பவொளி நிலவும் உள்ளத்தில் இறைவன் இருப்பது புலப்பட, “உள் இருக்கின்ற நாதரே” எனவும் இயம்புகின்றார்.

     (25)