4379.

          இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
          இதுதரு ணம்இங்கு வாரீர்
          இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்

உரை:

     தாழ்த்தல் - தாமதித்தல். இருமை - பிறப்பு வீடு என்று இரண்டுமாய் உயிர்கட்கருளுதல் பற்றி, “இருமையும் ஆயினீர்” எனப் புகழ்கின்றார்.

     (27)