4381.

          இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
          இத்தரு ணம்இங்கு வாரீர்
          இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்

உரை:

     உலகியல் நல்கும் துன்பம் சிறிது பொறுக்க வொண்ணாது என்பாராய், “இறையும் பொறுப்பரிது” எனக் கூறுகின்றார். இறை - சிறிதும். பொறுப்பு - தாங்குதல். இதநடம் - இன்பக்கூத்து.

     (29)