4383. இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
எங்கும் நிறைந்தீரே வாரீர்
இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
உரை: எங்கும் நிறைந்திருக்கும் தன்மையை விளக்குதற்கு “எள்ளுக்குள் எண்ணெய் போல்” என வுரைக்கின்றார். “யாவுளும் எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே” (சதகம்) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. இந்தொழில் வண்ணர் - சந்திரனைச் சூடியதனால் உளதாகும் அழகை யுடையவர். (31)
|