4384. இணையென்றும் இல்லா இணையடி என்தலை
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
இறுதியி லீர்இங்கு வாரீர். வாரீர்
உரை: இணையொன்றும் இல்லா இணையடி - ஒப்புச் சிறிதும் இல்லாத இரண்டாகிய திருவடி. இறுதியிலீர் - அழிவில்லாதவரே. “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்பர் திருநாவுக்கரசர். (32)
|