4386.

          ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
          இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
          உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்

உரை:

     ஈனம் - மல மாயை கன்மங்களின் தொடர்பால் உளதாகும் குறைபாடு. மெய்ஞ்ஞான விளக்கு - சிவஞானமாகிய ஒளி விளக்கு. உதயச் சுடர் - நாட்காலையில் வானத்தில் எழுகின்ற சூரிய வொளி. அது பலராலும் புகழப்படும் சிறப்புடையதாகலின், “உதயச்சுடர்” என உரைக்கின்றார்.

     (34)