4388.

          ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
          கெட்டா திருந்தீரே வாரீர்
          நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்

உரை:

     ஈது இயல் என்று ஓதிய வேதம், பரம்பொருளின் இயல்பு இதுவாம் என எடுத்தோதுகின்ற வேதங்கள். வேத ஞானத்துக்கும் எட்டாதது என்றற்கு, “வேதத்திற்கு எட்டாதிருந்தீரே” என மொழிகின்றார். நட்டார் - நண்பர்.

     (36)