4389.

          ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
          டேசரே நீர்இங்கு வாரீர்
          நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர

உரை:

     ஈசர் எனும் பல தேசர்கள் - திருவும் செல்வமும் உடையராதலால் ஈசர் எனச் சிறப்பிக்கப்படும் பலராகிய செல்வவொளி யுடையவர்கள். தேசு - ஒளி; பல தேசத்தவர் என்பாரும் உண்டு. நேசர் - நண்பர்.

     (37)