4390.

          ஈசர் பலிக்குழல் நேசர்என் றன்பர்கள்
          ஏசநின் றீர்இங்கு வாரீர்
          நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஈசர் என்றும், உண்பலி வேண்டி ஊர்தொறும் திரியும் நேசர் என்றும் அன்பர்கள் அன்பால் குறை கூறுவதுண்மையின், “ஈசர் பலிக்குழல் நேசர் என்று அன்பர்கள் ஏசு நீன்றீர்” எனக் கூறுகின்றார். ஏசுதல், குறை கூறுதல்; பழித்தலுமாம். நாசம், கேடு.

     (38)