4392.

          ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
          கீதல்செய் வீர்இங்கு வாரீர்
          ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஈதல் - அருள் ஞானத்தை வழங்குதல். வேண்டுவார் வேண்டுவது ஈதலுமாம். காதல் - பேரன்பு. ஓதரியீர் - இன்ன தன்மையன் என எடுத்து மொழிதற் கரியவரே.

     (40)