4395.

          உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
          குள்ள துரைசெய்தீர் வாரீர்
          வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்

உரை:

     உள்ளதே உள்ளது விள்ளது, உள்பொருளாகிய சிவ பரம்பொருளே உள்ளத்தின்கண் எழுந்தருள்வது; அதனை எடுத்தோதுக. உள்ளது உரை செய்தீர் - உண்மையை யுரைத்தவரே.

     (43)