4396.

          உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
          ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
          என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     உருவாய் அருவாய் அருவுருவாய், உருவம் நான்காகவும் அருவம் நான்காகவும் அருவுருவம் ஒன்றாகவும்; ஈசன், உருத்திரன், மால், அயன் என்ற நான்கும் உருவம்; சதாசிவன் அருவுருவம். சிவம், சத்தி, நாதம், விந்து என்ற நான்கும் அருவம். (சிவ. சித். 74). இவ்வாறு முத்திறத்து ஒன்பது வகையாயினும் அவற்றின் வேறாகவும் கூறுவது பற்றி, “அவை ஒன்று மல்லீர்” என இயம்புகின்றார். நல்லீர் - நன்மையே செய்பவரே.

     (44)