4404.

          உம்மாணை உம்மாணை உம்மையல் லால்எனக்
          குற்றவர் மற்றிலை வாரீர்
          உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     உம்மையன்றி எனக்கு உறுதுணை யாகுபவர் வேறு எவருமிலர் என்னும் தமது கூற்றை வற்புறுத்தற்கு, “உம்மாணை உம்மாணை” என அடுக்கி யுரைக்கின்றார். உற்றறிந்தீர் - என்னுள்ளிருந்து யாவும் அறிந்தவரே.

     (52)