4405.

          ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
          மோன நடேசரே வாரீர்
          ஞான நடேசரே வாரீர். வாரீர்

உரை:

     உயிர்களை உடம்பிற் புகுத்தி உலகில் வாழச் செய்வது ஊன நடனம். ஆன நடனம் - ஞானப் பேற்றுக்குரிய அருட்செயல். மௌனம் - மோனம் என வந்தது. ஞான நடேசர் - ஞான நாடகம் புரியும் நடராசப் பெருமான். “ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நானுணைப் பருக வைத்தவா, ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே” (சதகம்) என மாணிக்கவாசகர் ஓதுவது காண்க.

     (53)