4406.

          ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
          வோருமில் லீர்இங்கு வாரீர்
          யாருமில் லீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     அறிவோரும் இல்லீர் - உம்மை முழுதும் நன்கு அறிய வல்லவர் இல்லாதவர். ஒரு தனிப் பரமனாதலால், “யாரும் இல்லீர்” என மொழிகின்றார்.

     (54)