4407. ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
வீறுடை யீர்இங்கு வாரீர்
நீறுடை யீர்இங்கு வாரீர். வாரீர்
உரை: நினைப்பவர் நெஞ்சின்கண் தானாகச் சுரப்பதாகலின், “ஊறு சிவானந்தம்” எனவும், அந்தச் சிவானந்தத்தை ஆன்மாக்கள் பெறுமாறு செய்யும் தனிச் சிறப்புச் சிவத்துக்கமைந்திருப்பது விளங்க, “சிவானந்தப் பேறு தருகின்ற வீறுடையீர்” எனவும் புகல்கின்றார். வீறு - தனிச் சிறப்பு. (55)
|