4408. ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
உரை: கூத்தப் பெருமான் திருவடி இரண்டனுள் ஊன்றியது ஒன்று; தூக்கியது ஒன்று. ஊன்றிய திருவடி திரோபவமும் (மறைத்தல்) தூக்கிய திருவடி முத்தியும் நல்குவன என்பர். ஊன்றிய திருவடியால் மறைப்புண்டு வருந்துவது விளங்க, “ஊன்றும் நும் சேவடி சான்று தரிக்கிலேன்” என வுரைக்கின்றார். தரித்தல் - தாங்குதல். ஆன்றவர் - நற்குணமனைத்தும் அமைந்தவர். (56)
|