4409. ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
தோற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
உரை: ஊற்றை உடம்பு - மலநீர், சிறுநீர் முதலிய அழுக்கு நீர் ஊறுகின்ற உடம்பு; ஊத்தை யுடம்பெனக் கொண்டு, அழுக்கினால் முடை நாறும் உடம்பு என்பவரும் உண்டு. பொன்னென ஏற்றம் உடையீர் - பொன்னுடம்பென்னுமாறு உயர்த்தும் அருட்செயல் உடையவரே. தேற்றம் - ஞானத் தெளிவு. (57)
|