4410.

     ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
          பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
     ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஊடல் - பிணங்குதல். என்னுட் கூடல் வல்லீர் - என் உடம்பினுள் உயிரோடு கலத்தலையுடையவரே. ஆடலிற் சிறந்தவர் என்பார், “ஆடல் நல்லீர்” எனக் கூறுகின்றார்.

     (58)