4413.

          ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
          யோகம் கொடுத்தீரே வாரீர்
          போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்

உரை:

     ஊகம் - உணர்வு. யோக நெறியால் அழியாத் தேகத்தை யோகியர் பெறுவராதலால், அவ்வுண்மை புலப்பட “தேகம் அழியாத யோகம் கொடுத்தீரே” எனவும், யோகத்தின் விளைவு சிவபோகமாதலால், “போகம் கொடுத்தீரே” எனவும் இசைக்கின்றார்.

     (61)