4414.

          ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
          ஓதிய நாதரே வாரீர்
          ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்

உரை:

     ஊதியம் - திருவருள் ஞானமாகிய பயன். உண்மை - உண்மை ஞானம். தான் அனாதியாகவும், தன்னையொழிந்த ஆன்மாக்கள் அனைத்துக்கும் ஆதியாகவும் விளங்குதலால், “ஆதி யனாதியீர்” என வுரைக்கின்றார்.

     (62)