4415. என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர் இனி
என்குறை என்முன்னீர் வாரீர்
தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
உரை: நன்குறைவீர் - இனிது எழுந்தருளும் பெருமானாகிய நீவிர். இனி என் குறை - இப்பொழுது வந்தருளுதற்கு யாது குறை ஒன்றுமில்லையன்றோ. தன் குறையில்லீர் - தனக்கு ஒரு குறையும் இல்லாதவரே. (63)
|