4419. எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
எட்டும் படிசெய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர். வாரீர்
உரை: சிவாயநம என நிற்கும் திருவைந்தெழுத்தினுள் பத்தென்னும் எண்ணின் வடிவமாகிய என்பது ஆன்மாவாம் என்பது தெரிய வுணர்த்தினமை விளங்க, “எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல் எட்டும்படி செய்தீர்” என இயம்புகின்றார். எட்டும் இரண்டும் பத்து; இது ய என எண்ணாற் கூறப்படும். இனி, எட்டினை அகரமாகவும், இரண்டினை உகரமாகவும் கொண்டு, அகர வுகரங்களை உள்ளீடாகவுடையது ஓம் என்னும் பிரணவமென வழங்குதல் எனக் கூறலும் ஒன்று. நில முதற் பூதம் ஐந்தும், ஞாயிறு திங்கள் உயிர் ஆகிய மூன்றும் கூட எய்தும் எட்டும் இறைவன் உருவாம் என்று சான்றோர் கூறுவது பற்றி, “எட்டுரு வாயினீர்” என மொழிகின்றார் எனினும் பொருந்தும். (67)
|