4421.

          எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
          இச்சம யம்இங்கு வாரீர்
          மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். வாரீர்

உரை:

     சமயங்கள் யாவும் ஆசார சங்கற்ப விகற்பங்களைப் படைத்துச் சமரசவுண்மைக்கு ஊறு செய்தலைக் கண்டு தெளிந்தமையின், “எச்சமயங்களும் பொய்ச் சமயமென்றீர்” என இயம்புகின்றார். சத்திய ஞான சமரச சன்மார்க்கமே உண்மைச் சமயமாதலால், “மெய்ச் சமயம் தந்தீர்” என வுரைக்கின்றார்.

     (69)