4422. என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
இன்பால் பெறுகென்றீர் வாரீர்
தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
உரை: ஒன்று ஈந்து இதை இன்பாற் பெறுக என்றது, “அருட் பெருஞ் சோதி” என வரும் தனிப் பொருளை யுபதேசித் தருளினமை குறித்து நிற்கிறது. தென்பால் முகங் கொண்டீர் - தட்சிணாமூர்த்தி யாயினவரே. (70)
|