4423. எச்ச உரையன்றென் இச்சையெல் லாம்உம
திச்சைகண் டீர்இங்கு வாரீர்
அச்சம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
உரை: எச்ச வுரையன்று - குறை யுடைய சொல்லன்று, அஃதாவது பொய்யுரை யன்று என்பதாம். “என் இச்சை யெல்லாம் உமது இச்சை கண்டீர்” என்பது என்னுடைய இச்சை, அறிவு, செயல் யாவும் நின்னுடைய இச்சையும் அறிவும் செயலுமேயாம் எனத் தன் பணி நீத்தலாம். இதனை இறைபணி நிற்றல் என மெய்கண்டார் கூறுவர். (71)
|