4425.
ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும் பாராய ணம்செய்வீர் வாரீர் ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
உரை:
ஏர் - சிறப்பு; அழகுமாம். பாராயணம் செய்தல் - நியமாகச் சிந்தித்து ஓதுதல். செய்வீர் - செய்யப்படுகின்றவரே. ஊராயம் - ஊரவர்க் கொத்த நண்பர். (73)
(73)