4426. ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
ஏம சபேசரே வாரீர்
சோம சிகாமணி வாரீர். வாரீர்
உரை: ஏமம் - பாதுகாப்பு; பொன். வாம சுகம் - திருவருளின்பம். வாமம் - அழகுமாம். ஏமசபேசர் - பொற் சபையில் உள்ள ஈசர். சந்திரனை முடியிற் கொண்டிருத்தலால், “சோம சிகாமணி” என்று புகழ்கின்றார். (74)
|