4428. ஏக பராபர யோக வெளிக்கப்பால்
ஏக வெளிநின்றீர் வாரீர்
ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
உரை: ஏகன் - ஒருவன். பராபரன் - மேலும் கீழுமாகியவன். யோக வெளி - துவாத சாந்தப் பெருவெளி. தனக்குமேல் வெளி யாதும் இன்மை விளங்க, “ஏகவெளி” என இசைக்கின்றார். தனி முதற் பரமனாகலின் ஏகன் என்றும், பலவாகிய உயிர்தோறும் இருத்தலால் அநேகன் என்றும் இயம்புகின்றார். (76)
|