4429. ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
உரை: நல்வினையால் மேலுலகு புகுவதும், வினைப்போக நுகர்ச்சி முடிவில் கீழுலகிற் பிறப்பதும் செய்தமையால், “ஏறி இறங்கி இருந்தேன்” என்றும், இறவாப் பெருவாழ்வு பெற்றமை விளங்க, “இறங்காமல் ஏற வைத்தீர்” என்றும் இசைக்கின்றார். தேறவைத்தல் - உண்மை ஞானத்தை யுணரச்செய்தல். (77)
|