4430. ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
உரை: யோக முடிவில் துவாத சாந்தத்தில் ஞான சந்திராமுதம் உண்டு. தனித்திருத்தல் யோகப்பயன் என்பராதலால், அதனை “ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளது என்று ஏகாந்தம் சொல்லினீர்” என உரைக்கின்றார். தேகாந்தம் இல்லீர் - அழியும் உடம்பில்லாதவர். (78)
|