4432. ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
ஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்
உரை: ஏடாயிரம் என்னை - பல்லாயிர நூல்களைப் படிப்பதாற் பயன் யாது; கோடா மொழி - பொய்படாத மெய்ம்மொழி. ஏடா - உயர்ந்தோர் தாழ்ந்தோரை யழைக்கும் வழக்குச் சொல். ஈடாவார் - ஒப்பாவார். (80)
|