4433.

          ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
          ஈசான மேலென்றீர் வாரீர்
          ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்

உரை:

     ஏசாத தந்திரம் - குற்றமில்லாத ஆகமம். பேசாத மந்திரம் - மானதமாய்த் தியான மொன்றிற்கே யுரிய வேத மந்திரம். இவ்விரண்டினும் மேலானது ஈசான முகத் தியான மந்திரம். ஆசாதி - ஆசை முதலிய குற்றம்.

     (81)