4434. ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
உரை: ஆனின் பால் - பசுவின் பால். பசுவின் பால், தயிர், நெய் முதலாய ஐந்தும் கொண்டு சிவன் திருமேனிக்கு அபிடேகம் செய்யும் இயல்பு விளங்க, “ஆவின் பால் ஆடுவீர்” என வுரைக்கின்றார். “அட்டமா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடி” (சோற்றுத் துறை) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. (82)
|