4435.
ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத் தைந்துஞ் செயும்என்றீர் வாரீர் இந்து சிகாமணி வாரீர். வாரீர்
உரை:
மலங்கள் ஐந்தாவன : மூல ஆணவ மலம், திரோதன மலம், மாமாயை, மாயை, கன்ம மலம் என்பன (சிவப். 32). எழுத்தைந்துமாவன சிவாயநம என்பன. இந்து - சந்திரன். (83)
(83)