4436.

          ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
          ஐயம் தவிர்த்தீரே வாரீர்
          மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்

உரை:

     சந்தேக வீபரித ஞானங்களால் தடுமாறி வருந்தினமை தோன்ற, “ஐயமுற்றேன்” எனக் கூறுகின்றார். வையம் - உலகம். கரி - சான்று. உண்மை ஞானம் பெற்றமை விளங்க, “ஐயம் தவிர்த்தீர்” என வுரைக்கின்றார். மெய்யம்பலம் - நிலையான சிற்றம்பலம்.

     (84)