4437. ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
தையர் தொழநின்றீர் வாரீர்
துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
உரை: ஐயர் - தலைவர். நடம்புரி மெய்யர் - கூத்தாடல் செய்யும் நடராச மூர்த்தி. ஐயர் - மெய்யுணர்வுடையோர். துய்யர் உளம் - தூய்மை மிக்க சான்றோருடைய தூய மனம். (85)
|