4438.

          ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
          றைவணர் ஏத்துவீர் வாரீர்
          பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்

உரை:

     ஐவணம் : பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, நீலம். ஐவணர் : அயன், திருமால், உருத்திரர், மகேசுவரர், சதாசிவர் என்ற ஐவகையினர். பொய்வணம் - பொய்யான உணர்வொழுக்கங்கள்.

     (86)