4441. ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
ஒத்த இடங்காட்ட வாரீர்
சித்த சிகாமணி வாரீர். வாரீர்
உரை: ஒத்த இடம் - மனவொருமைக்கு அமைந்த இடம் நித்திரை - யோக நித்திரை. ஒத்த இடம் - இருவினை யொப்புணர்வு. சித்த சிகாமணி - சித்தத்தின் உச்சியில் விளங்கும் மாணிக்க மணி போல்பவர். (89)
|