4442. ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
ஒட்டுவைத் ேதனும் வாரீர்
எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
உரை: ஒட்டு - பற்று. “பற்று நான் மற்றிலேன்” (வாழாப்) என்பது திருவாசகம். விடுதல் - நீங்குதல். ஒட்டு வைத்தல் - சத்தியம் செய்தல். எட்டுக் குணம்; தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. (90)
|