4445.

          ஓங்கார நாடகம் பாங்காகச் செய்கின்ற
          ஓங்கார நாடரே வாரீர்
          ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்

உரை:

     ஓங்கார நாடகம் - பிரணவச் சூழலில் அகர வுகர மகரங்களாய் நின்றாடும் ஞான நாடகம் என்பர். பாங்கு - அழகு. ஓங்கார நாடர், பிரணவாகார உலகையுடையவர். ஆங்காரம் - அகங்காரமாகிய செருக்கு.

     (93)