4446.

          ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
          ஓங்கு நடேசரே வாரீர்
          பாங்குசெய வீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     சிறியவும் பெரியவுமாகிய பிண்டங்களையும் அண்டங்களையும் தன்னுட் கொண்டிருக்கும் அந்த வெளியை, “பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி” என வுரைக்கின்றார்.

     (94)